ஆஸ்திரேலியாவில் புழுதிப்புயலால் இயல்புநிலை பாதிப்பு

0 318

ஆஸ்திரேலியாவில் வீசிய புழுதிப்புயல் காரணமாக, நாட்டின் தென் கிழக்கு பகுதிகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன.

நியூ சவுத் வேல்ஸ் மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா பகுதிகளில் 500 கிலோ மீட்டர் வேகத்தில் புழுதிப்புயல் வீசியது. இதனால் எங்கும் புழுதிமயமாகவே காட்சியளித்தது. காட்சிகள் கண்ணுக்கு மறைத்ததால், மக்கள் தவித்துப் போயினர். புழுதிப்புயல் வீசிய பகுதிகளில் வானமும், சுற்றுச்சூழலும் மஞ்சள் வண்ணமாக காட்சியளித்தது.

மோசமான வானிலையால் ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. புழுதிப்புயல் வீசிய பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுவாசக்கோளாறுகள் ஏற்படும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், சுகாதார எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments