ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை விலைக்கு வாங்க டாட்டா சன்ஸ் தொடர்ந்து பேச்சுவார்த்தை

0 1030

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை விலைக்கு வாங்க டாட்டா சன்ஸ் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறது. கடும் நிதி நெருக்கடியில் உள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை விலைக்கு வாங்க டாட்டா சன்ஸ் பேச்சு நடத்தி வருவதாக மின்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜெட் ஏர்வேஸ் தலைவர் நரேஷ் கோயலுடன் டாட்டா சன்ஸ் முதன்மை நிதி அதிகாரி சவுரப் அகர்வால் பேச்சு நடத்தி வருவதாக அது குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பேச்சு அடுத்த சில வாரங்களுக்கு நீடிக்கும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது. எரிபொருள் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, குறைவான கட்டணம், தொழில் போட்டி ஆகியவற்றின் காரணமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தொடர்ந்து மூன்றாவது காலாண்டிலும் இழப்பைச் சந்தித்துள்ளது.

இந்நிலையில் குறைந்த இலாபம் வரும் தடங்களில் விமானங்களை இயக்குவதை நிறுத்திவிட ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments