தீபாவளியை முன்னிட்டு வேலை நிறுத்த அறிவிப்பை ஒத்திவைப்பதாக போக்குவரத்துத் தொழிலாளர்கள் அறிவிப்பு

0 268

தீபாவளியை முன்னிட்டு வேலை நிறுத்த அறிவிப்பை ஒத்திவைப்பதாக போக்குவரத்துத் தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.

சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் 22, 29, 31-ஆம் தேதிகளில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் போக்குவரத்து தொழிற் சங்கங்களுடனான பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. அண்மையில் 20 சதவீத போனஸ் 5 ஆயிரம் முன்பணத் தொகை மற்றும் முதற்கட்டமாக 258 கோடி ரூபாய் நிலுவைத் தொகை உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், நிலுவைத் தொகையை உயர்த்தி வழங்குதல், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான 86 கிரிமினல் வழக்குகளை ரத்து செய்தல், பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்களை வலியுறுத்தி பல்லவன் இல்லம் முன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் தீபாவளியை முன்னிட்டு வேலை நிறுத்த அறிவிப்பை ஒத்திவைப்பதாக தெரிவித்த அவர்கள், கோரிக்கை தொடர்பாக வரும் 27-ஆம் தேதிக்குள் தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணத் தவறினால் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments