செல்பி எடுக்க முயன்ற இளைஞனின் செல்போனை தட்டி விட்ட நடிகர் சிவக்குமார்

0 7943

மதுரையில் தனியார் கருத்தரிப்பு மைய திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகர் சிவக்குமார், செல்பி எடுக்க முயன்றவரின் செல்போனை தட்டி விட்டதால்
ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  பெரியார் பேருந்து நிலையம் அருகே தனியார் கருத்தரிப்பு மைய திறப்புவிழாவில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நடிகர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஏராளமான ரசிகர்களும் பொதுமக்களும் சிவக்குமாரை காண்பதற்காக கூடியிருந்தனர். ரிப்பன் வெட்டி திறந்து வைக்க சிவக்குமார் வந்த போது ஒரு இளைஞர் செல்பி எடுக்க முயன்றார். அப்போது இளைஞரின் செல்போனை ஆவேசமாக தட்டி விட்டார் சிவக்குமார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments