காங்கிரஸ் நடத்தியது, ஒரு குடும்ப ஆட்சி - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

0 345

ஒரு பிரதமர் இன்னொரு பிரதமரை பெற்றுப்போடும் குடும்ப ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், பா.ஜ.க. அதை மாற்றி இருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடந்த பா.ஜ.க. இளைஞரணிக் கூட்டத்தில், மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சியில் அவரவர் சொந்த குடும்பங்கள் மட்டுமே பயன் அடைந்ததால், ஏழை மக்களைக் கொண்ட பணக்கார நாடாக இந்தியா உள்ளதாக விமர்சித்தார்.

நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி என வழிவழியாக பிரதமர் வகித்ததை விமர்சிக்கும் வகையில், காங்கிரஸ் குடும்ப ஆட்சியில் ஒரு பிரதமர் இன்னொரு பிரதமரையும், ஒரு முதலமைச்சர் இன்னொரு முதலமைச்சரையும் பெற்றுப்போட்டதாக கட்கரி கூறினார். ஆனால் பா.ஜ.க. ஒரு குடும்பத்தின் கட்சி அல்ல என்றும், எந்த ஒரு தனிநபரையும் சார்ந்தது அல்ல என்றும் கட்கரி தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments