வாகனத்தில் இருந்தபடி செல்பி எடுத்த வாகன ஓட்டிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

0 345

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ஆபத்தை உணராமல் வாகனத்தில் இருந்தபடி செல்பி எடுத்த பயணிக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் திம்பம் மலை உச்சியிலிருந்து தலமலை வரை 23 கிலோமீட்டர் தூரத்திற்கு அடர்ந்த வனப்பகுதியில் வனச்சாலை அமைந்துள்ளது.

யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடும். இப்பகுதியில் வனகிராம மக்கள் மட்டுமே பயணிக்க அனுமதி உண்டு. இந்நிலையில் வனத்துறையினரிடம் சிறப்பு அனுமதி பெற்று சென்ற வாகன ஓட்டி ஒருவர், ஆபத்தை உணராமல் செல்பி எடுத்துள்ளார்.

இதுகுறித்த செய்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானதை தொடர்ந்து அந்த வாகனத்தின் பதிவுஎண்ணை வைத்து செல்பி எடுத்த ஆசனூரை சேர்ந்த பாக்கியராஜ் என்பவருக்கு, 5 ஆயிரம் ரூபாயை வனத்துறையினர் அபராதமாக விதித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments