2018 சியோல் அமைதிப் பரிசுக்கு பிரதமர் மோடி தேர்வு

0 680

2018ம் ஆண்டுக்கான சியோல் அமைதி விருதுக்கு பிரதமர் மோடிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயல்படுவது, உலக பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பது மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப இந்திய மக்களிடையே மனிதவள பண்பை அதிகரிக்க செயல்படுவது போன்றவற்றை பாராட்டி, மோடிக்கு இந்த பரிசை வழங்க சியோல் கமிட்டி முடிவு செய்துள்ளது.

இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சியோல் பரிசுக் குழு, பிரதமர் மோடியை இந்தியாவின் வளர்ச்சி மற்றும் சர்வதேச பொருளாதார வளர்ச்சிக்காக பாடுபடுபவர் என்று அடையாளப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், உள்நாட்டு அமைதி மற்றும் உறுதியான வெளிநாட்டு கொள்கைகளை உருவாக்கி சர்வதேச அமைதிக்காக பணியாற்றியதற்கும் மோடிக்கு அமைதிப் பரிசு வழங்கப்படுவதாக கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments