சத்தியமங்கலம் அருகே ஆபத்தை உணராமல் வாகனத்தில் இருந்தபடி செல்பி எடுக்கும் வாகன ஓட்டிகளால் விபத்து ஏற்படும் அபாயம்

0 874

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ஆபத்தை உணராமல் வாகனத்தில் இருந்தபடி செல்பி எடுக்கும் வாகன ஓட்டிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் திம்பம் மலை உச்சியிலிருந்து தலமலை வரை 23 கிலோமீட்டர் தூரத்திற்கு அடர்ந்த வனப்பகுதியில் வனச்சாலை அமைந்துள்ளது.

இச்சாலையில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் பகல் நேரத்தில் நடமாடுவது வழக்கம். இப்பகுதியில் உள்ள வனகிராம மக்கள் மட்டுமே இச்சாலையில் பயணிப்பதற்கு அனுமதி உண்டு. இந்நிலையில் வனத்துறையினரிடம் சிறப்பு அனுமதி பெற்று வரும் வாகன ஓட்டிகள், இச்சாலையில் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு மது அருந்துவதோடு ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கின்றனர். எப்போது வேண்டுமானாலும் வனவிலங்குகள் தாக்க வாய்ப்புள்ளதை அறியாமல் வாகன ஓட்டிகள் வனத்துறை விதிகளை மீறுவதால் மனித - விலங்கு மோதல் ஏற்படும் அபாயம் உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments