போக்குவரத்துக்கான உலகின் மிகப்பெரிய ஆளில்லா விமானத்தை வெற்றிகரமாக பரிசோதித்தது சீனா

0 400

போக்குவரத்துக்கான உலகின் மிகப்பெரிய ஆளில்லா விமானத்தை சீனா வெற்றிகரமாக பரிசோதித்து பார்த்துள்ளது.

FH 98 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆளில்லா விமானத்தை சீனாவின் ஏரோஸ்பேஸ் மின்னணு தொழில்நுட்பக் கழகம் தயாரித்துள்ளது.  1.5  டன் எடை கொண்ட பொருட்களை இந்த விமானம் சுமந்து செல்லும் திறன் பெற்றது.

4 ஆயிரத்து 500 மீட்டர் உயரத்தில் மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வல்லமை பெற்றது FH 98 ஆளில்லா விமானம். இதை, வடக்குப் பகுதியில் உள்ள பாவ்ட்டா ((Baotao)) சோதனைத் தளத்தில் வைத்து சீனா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments