சத்தீஸ்கரில் காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக, அக்கட்சியின் மூத்த தலைவர் ராம் தயாள் உய்க் பாஜக-வில் இணைந்தார்

0 556

இன்னும் ஒரு மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள உள்ள சத்தீஸ்கரில், காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக, அக்கட்சியின் மூத்த தலைவர் ராம் தயாள் உய்க் ((Ram Dayal Uike)) பாஜக-வில் இணைந்துள்ளார்.

சத்தீஸ்கரில் சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. நவம்பர் 12ஆம் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக தலைவர் அமித்ஷா, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலை ஓரிரு நாளில் அறிவிக்க உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் ராம் தயாள் உய்க், பாஜக தலைவர் அமித்ஷா, சத்தீஸ்கர் முதலமைச்சர் ரமண்சிங் முன்னிலையில் பாஜக-வில் இணைந்தார். சத்தீஸ்கரின் பாலி தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு 4 முறை தேர்வுசெய்யப்பட்டவர் ராம் தயாள் உய்க் என்பது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments