பாஜக அரசு பெண்களுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தந்துள்ளது - பிரதமர் மோடி

0 634

இந்தியாவில் பாஜக அரசு பெண்களுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தேசிய மனித உரிமை ஆணையத்தின் வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி ஆணையத்திற்கான இணையதளத்தையும் அதன் பெயரிலான சிறப்பு தபால் தலைகளையும் வெளியிட்டார். பின்னர் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, ஒரு காலத்தில் இந்தியாவில் இரவுப் பணிகளுக்குப் பெண்களை அனுப்பவே அச்சப்படும் சூழல் நிலவியதை சுட்டிக் காட்டினார்.

மகள்களை காப்போம், மகள்களை படிக்க வைப்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து பாஜக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இன்று பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சாதனை படைத்து வருவதாக பிரதமர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

பெண்களை கருவிலேயே கொன்று விடும் முந்தைய தலைமுறையினரால் பெண்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாக இருந்தது என்றும் பிரதமர் வேதனை தெரிவித்தார். இன்று பெண் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்று தாம் பெருமைப்படுவதாக மோடி குறிப்பிட்டார். இந்த விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments