ரஷ்யாவுடன் ஆயுத ஒப்பந்தம் செய்து கொண்ட இந்தியா மீது, தான் எடுக்க உள்ள நடவடிக்கையை விரைவில் தெரிந்து கொள்ளலாம் : அதிபர் டிரம்ப்

0 2365

பொருளாதார தடையையும் மீறி ரஷ்யாவுடன் ஆயுத ஒப்பந்தம் செய்து கொண்ட இந்தியா மீது தான் எடுக்க உள்ள நடவடிக்கையை மிக விரைவில் தெரிந்து கொள்ளலாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். ரஷ்யா மீதான அமெரிக்காவின் பொருளாதார தடையையும் மீறி, அந்நாட்டிடம் இருந்து s400 ஏவுகணை அமைப்பை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்தது.

இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த விவகாரத்தில் தமது முடிவை இந்தியா விரைவில் அறிந்து கொள்ளும் என்றார். எப்போது முடிவை வெளியிடுவீர்கள் என்று கேட்ட போது, தாங்கள் நினைப்பதற்கு முன்னதாகவே என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


  • Selvakumar

    waiting for Trump decision.