ஃபுளோரிடாவை நெருங்குகிறது மைக்கேல் புயல்

0 353

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தை நெருங்கும் மைக்கேல் புயல், மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய 4 ஆம் நிலைப் புயலாக வலுப்பெற்றது.

அட்லாண்டிக்கில் உருவான இந்தப் புயல் ஃபுளோரிடாவில் இன்னும் சில மணி நேரங்களில் கரையைக் கடக்கவுள்ளது. வலு குறையாமல் கரையைக் கடக்கும் பட்சத்தில் மிகப்பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 210 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும், 13 அடி வரை கடலில் அலைகள் எழ வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஃபுளோரிடாவில் அவசர நிலையை அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். ஜார்ஜியா, அலபாமா மாநில மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments