அமெரிக்கத் தூதர் டினா பாவெல்லைப் புதிய ஐ.நா.வுக்கான தூதராக நியமிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பரிசீலனை

0 210

ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதர் பதவியில் இருந்து விலகுவதாக நிக்கி ஹாலே அறிவித்துள்ளதை அடுத்து, அந்தப் பதவிக்கு டினா பாவெல் பெயரைப் பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதராக உள்ள இந்திய வம்சாவளியினரான நிக்கி ஹாலே பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். டிசம்பர் மாத இறுதியில் அவர் பதவி விலக உள்ளார். இந்நிலையில் அந்தப் பதவியில் அமர்த்த அதிபர் டொனால்டு டிரம்ப் யாரைத் தேர்ந்தெடுப்பார் என ஊகங்கள் நிலவி வந்தன.

டிரம்ப் தனது மகள் இவங்காவை நியமிக்கக் கூடும் என்றும் பலர் தெரிவித்தனர். அந்த ஊகத்துக்கு முடிவு கட்டும் வகையில், தேசியப் பாதுகாப்புத் துணை ஆலோசகராக உள்ள டினா பாவெல்லை ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதராக நியமிக்கப் பரிசீலிப்பதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments