நான் காதலிக்கவில்லை..! - 96 நாயகி கதறல்..!

0 1682

96 திரைப்படத்தில்  நடிகர் விஜய் சேதுபதியின் பள்ளிபருவ கதாபாத்திரத்தில் நடித்த புதுமுக நடிகருடன் காதல் என பரவிய தகவலுக்கு மாணவி கதாபாத்திரத்தில் நடித்த கர்நாடக இளம் நடிகை டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

96 ......!  விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியாகி உள்ள இந்த படம் பற்றிய பேச்சு தான் கடந்த 4 தினங்களாக சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது..!

விஜய் சேதுபதி, திரிஷா ஆகியோரின் பள்ளி பருவ கதாபாத்திரங்களாக நகைச்சுவை நடிகர் எம்.எஸ். பாஸ்கரின் மகன் ஆதித்யாபாஸ்கரும், கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பள்ளி மாணவி கவுரி கிஷனும் நடித்திருந்தனர்.

அண்மையில் கவுரி கிஷனின் பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்து புதுமுக நடிகர் அதித்யா பாஸ்கர், இருவரும் ஒன்றாக இருக்கும் புகைபடம் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இதையடுத்து சினிமாவிலும் நிஜத்திலும் பொறுத்தமான ஜோடி என்பது போல மீம்ஸ்களும், கிசுகிசுகளும் பரவியது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த புதுமுக நடிகை கவுரி இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

தனக்கும் ஆதித்யா பாஸ்கருக்கும் எந்த ஒரு உறவுமுறையும் இல்லை என்றும், அவரும், தானும் திரையில் ராம் மற்றும் ஜானு கதாபாத்திரத்தில் காதலர்களாக நடித்ததாகவும், அத்தோடு முடிந்து விட்டது என்றும் நிஜத்தில் காதலர்கள் இல்லை என்றும் இது போன்ற பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் கண்ணியத்துடன் நடந்து கொள்ளுமாறும் ஆதங்கப்பட்டு டுவிட்டரில் கருத்து பதிவிட்டார்.

கவுரியின் பதிவை ரீடிவிட் செய்துள்ள நடிகர் ஆதித்யா பாஸ்கர், பிரத்யேகமாக ஒரு பதிவும் வெளியிட்டுள்ளார். அதில் தானும் கவுரியும் சிறந்த நண்பர்கள் என்றும். தங்களுக்குள் வேறு எந்த உறவும் இல்லை என்றும், சினிமா நடிகர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கை உண்டு என்பதை தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

சில படங்களில் நடிகர் நடிகைகளின் கதாபாத்திரங்கள் இயல்பாக தோன்றுவதற்கு இயக்குனர்களின் கைவண்ணம் தான் காரணம், அந்தவகையில் 96 படத்தின் இயக்குனர் பிரேம் குமார் நடிகர் நடிகைகளை சிறப்பாக வேலைவாங்கி உள்ளார். அதனால் தான் நிஜம் என்று ரசிகர்கள் நம்ப தொடங்கி இருக்கின்றனர் என்கின்றனர் சினிமா விமர்சகர்கள்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments