மேற்கிந்தியத் தீவு நாடான ஹைதியில் நிலநடுக்கத்தால் 11பேர் உயிரிழப்பு

0 178

கரீபியன் தீவுநாடான ஹைதியில் நிலநடுக்கத்தால் 11பேர் உயிரிழந்தனர். அட்லாண்டிக் பெருங்கடல், கரீபியன் கடல் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள தீவுநாடு ஹைதி. இது மேற்கிந்தியத் தீவுக் கூட்டத்தில் உள்ள ஒரு நாடாகும்.

இந்தத் தீவில் 5 புள்ளி 9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. போர்ட் டி பைக்ஸ் என்கிற கடற்கரை நகருக்கு வடமேற்கே 20லோமீட்டர் தொலைவில் 12கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம்கொண்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் போர்ட் டி பைக்ஸ் நகரில் வீடுகளும் கட்டடங்களும் இடிந்ததில் குறைந்தது 11பேர் உயிரிழந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவித்துள்ளன. ஹைதி நாட்டில் 2010இல் 7ரிக்டர் அளவில் ஏற்பட்ட வலுவான நிலநடுக்கத்தில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத் தக்கது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT