இயக்குனர் மணிரத்னத்தின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

0 516

சென்னை அபிராமபுரத்தில் உள்ள இயக்குனர் மணிரத்னத்தின் அலுவலகத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

செக்கச் சிவந்த வானம் படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்க முடியவில்லை என்றால் விபரீதமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என சென்னை அபிராமபுரத்தில் உள்ள இயக்குநர் மணிரத்னத்தின் அலுவலகத்துக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் வந்தது.

அதைத் தொடர்ந்து 2 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் அழைத்த மர்ம நபர், சர்சைக்குரிய வசனத்தை உடனடியாக நீக்காவிட்டால் வெடிகுண்டு வீசப்படும் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து மணிரத்னத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவரது ஆலோசனைப்படி, அலுவலக பணியாளர், அபிராமபுரம் காவல்நிலையத்தில் புகாரத்தார். இதையடுத்து வந்த செல்போன் எண்ணைக் கொண்டு போலீசார் மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments