மதுராந்தகத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்

0 131

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக 5 மணி நேரமாக வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கம் முதல் சோத்துபாக்கம் வரை பேருந்துகள், லாரிகள், கார்கள் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மதுராந்தகம் பகுதியில் அதீத நெரிசல் காரணமாக அதிகாலை முதலே வாகன போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் சென்னை நோக்கி வந்தவர்கள் கடும் அவதியடைந்தனர்.

இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு பரனூர் டோல்கேட் மற்றும் சுற்று வட்டாரபகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments