போக்குவரத்து நெரிசலே இல்லாத இடத்தில் மரங்களை வெட்டி வீழ்த்தி பாலம் அமைக்கும் பணிகள்?

0 294

மதுரையில் போக்குவரத்து நெரிசலே இல்லாத இடத்தில் உயர்மட்டப் பாலம் அமைப்பதற்காக பழமையான மரங்கள் ஆயிரக்கணக்கில் வெட்டி வீழ்த்தப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் பாரத் மாலா திட்டத்தின் கீழ் மதுரை - நத்தம் இடையே 32 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆயிரத்து 28 கோடி ரூபாய் செலவில் நான்கு வழிச்சாலை அமையவுள்ளது. இதில், சொக்கிகுளம் தொடங்கி செட்டிகுளம் வரை புதுநத்தம் சாலையில் 7.3 கிலோ மீட்டர் தொலைவுக்கு 612 கோடி ரூபாய் செலவில் உயர் மட்டப் பாலம் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.

image

இதற்காக 16 ஆயிரத்து 372 சதுர அடி பரப்புள்ள நிலம் கையகப்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதன் முதற்கட்டமாக புது நத்தம் சாலை முதல் செட்டிகுளம் வரை சாலையின் இருபுறமும் இருந்த ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

போக்குவரத்து இடையூறு ஏதும் இல்லாத இந்த இடத்தில் பாலம் தேவை தானா என்ற கேள்வியையும் முன்வைத்துள்ள மக்கள், பசுமையை அழிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளனர்.

image

இது ஒருபுறம் இருக்க, போக்குவரத்திற்கு பாலமும், சாலையும் அவசியம் தான் என்கிற ஆதரவும் எழுந்துள்ளது. நிலத்தைக் கையகப்படுத்துவதிலும் ஆட்சேபனை ஏதுமில்லை என்றும் மக்கள் கூறியுள்ளனர்.

இயற்கையை பாதிக்காத நலத்திட்டங்களை மட்டுமே செயல்படுத்த வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments