மாயாற்று வெள்ளப்பெருக்கில் சிக்கிய லாரியை மற்றொரு லாரியைக் கொண்டு பொதுமக்களே மீட்டனர்

0 87

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மாயாற்று வெள்ளத்தில் சிக்கிய லாரியை மற்றொரு லாரியைக் கொண்டு பொதுமக்களே மீட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் தெங்குமரஹடா கிராமத்துக்கு வாழைத்தார்களை ஏற்ற வந்த லாரி ஒன்று, கல்லம்பாளையம் அருகே மாயாற்றைக் கடக்க முயன்றபோது வெள்ளத்தில் சிக்கி பழுதாகி நின்றது. மற்றொரு லாரியைக் கொண்டுவந்து அந்த லாரியை பொதுமக்களே இரண்டு மணி நேரம் போராடி மீட்டனர்.

மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அல்லிமாயாறு, சித்திரம்பட்டி, தெங்குமரஹடா, கல்லம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments