ஈரோட்டில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மீது தாக்குதல்

0 108

ஈரோட்டில் போக்குவரத்து காவல் ஆய்வாளரை தாக்கிய தனியார் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களை போலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து பெருந்துறைக்கு டிடிஎஸ் என்ற தனியார் பேருந்து புறப்பட்டது. பன்னீர் செல்வம் பூங்கா அருகே வந்தபோது, பேருந்தின் ஓட்டுனர் சாலையில் யூடார்ன் செய்துள்ளார். அப்போது அங்கிருந்த ஈரோடு தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் சரவணன், பேருந்தை வழிமறித்து நேராக செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் அவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலிசார், அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தது, தாக்குதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஓட்டுனர் குருசாமி, நடத்துனர்கள் நிர்மல், சம்பத் ஆகியோரை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments