இறந்த காட்டு யானைக்கு அஞ்சலி செலுத்திய யானைகள்

0 253

இறந்துபோன காட்டு யானையின் உடலை ஏராளமான யானைகள் சுற்றிச் சுற்றி வந்த காட்சி காண்போரை நெகிழச் செய்தது.

அனுராதபுரம் பகுதியில் உள்ள கலவேவா ((Kala Wewa)) வனப்பகுதியில் உள்ள நீர் நிலையில் நேற்று முன்தினம் தண்ணீர் குடிக்க யானை ஒன்று வந்தது. அப்போது வயது முதிர்ச்சி மற்றும் உடலில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக மயங்கிச் சரிந்த அந்த யானை சிறிது நேரத்திற்குள் உயிரிழந்தது.

இந்நிலையில் நேற்று அந்தக் குட்டைக்கு வந்த யானைக் கூட்டம் ஒன்று இறந்து கிடந்த யானையைத் மெதுவாகத் தொட்டுப் பார்த்தது. பின்னர் அமைதியாக நின்ற யானைகள் ஒவ்வொன்றும் இறந்த யானையைத் தொட்டுப் பார்த்த பின் அங்கிருந்து அகன்றன. இதேபோல் மேலும் இரு யானைக் கூட்டமும் வந்து கண்ணீரைச் சொறிந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments