புலிகள் காப்பகத்தில் விநாயகர் பூஜை நடத்திய யானைகள்

0 269

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் கும்கி பயிற்சி பெற்ற கேரள யானைகளுக்கு வழியனுப்பு விழாவும், விநாயகர் சதுர்த்தி விழாவும் நடைபெற்றன.

image

அங்குள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் கேரள மாநிலம் முத்தங்கா சரணாலய யானை சூர்யா, கோடநாடு முகாம் யானை நீலகண்டன், பத்தனம்திட்டா யானை சுரேந்திரன் ஆகியவற்றுக்கு கும்கி பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இந்தப் பயிற்சி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, மீண்டும் சொந்த முகாம்களுக்கு வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

அங்குள்ள விநாயகர் கோவிலில் கிருஷ்ணா என்ற குட்டியானை மணியடித்தவாறே கோவிலைச் சுற்றி வந்து பூஜை செய்தது. பின்னர் மண்டியிட்டு வணங்கியது. பின்னர் அனைத்து யானைகளும் ஒன்றாக பிளிறல் சத்தம் எழுப்பி வழிபாடு நடத்தின.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments