வோடபோன் - ஐடியா நிறுவனங்கள் இணைப்பின் விளைவாக 2500 பேர் வேலையிழக்கும் நிலை

0 1001

வோடஃபோன் - ஐடியா நிறுவனங்கள் இணைப்பின் விளைவாக 2500 பேர் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தொலைத்தொடர்புத்துறையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் இருந்த வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களின் இணைப்பு கடந்த வாரம் இறுதி செய்யப்பட்டது.  தற்போது 18 ஆயிரம் பேர் வேலை பார்த்து வரும் நிலையில், செலவைக் குறைக்கும் விதமாக அடுத்த சில மாதங்களில் 2500 பேரை வேலையை விட்டு நீக்க முடிவு செய்துள்ளதாக மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முதலிடத்தை தக்க வைப்பதற்காக பதவி உயர்வு, ஊதிய உயர்வு நடப்பு வருடம் நிறுத்தி வைக்கப்படும் என மற்றொரு அதிகாரி கூறியுள்ளார். இரு நிறுவனங்கள் இணைப்பின் மூலம் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் வரை சேமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments