இங்கிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கிடையே ஷிகர் தவான் பாங்ரா நடனம்

0 215

இங்கிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கிடையே இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் மைதானத்தில் ஆடிய பங்காரா நடனத்தின் உற்சாகம் ரசிகர்கள், விமர்சகர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் தொற்றிக் கொண்டது.

இரு அணிகளிடையேயான 5-வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. உற்சாகமான ஒரு தருணத்தில் ஷிகர் தவான் பங்காரா நடனம் ஆடினர். அந்த உற்சாகம் ரசிகர்களையும் தொற்றிக்கொள்ள அவர்களும் நடனமாடினர்.

ஷிகர் தவானும் ரசிகர்களும் நடனமாடியதைத் தொடர்ந்து கிரிக்கெட் விமர்சகராக இருந்த ஹர்பஜன் சிங்கும் நடனம் ஆடினார். அப்போது சக விமர்சகராக இருந்த டேவிட் லாயிட் ((David Llyod)) ஹர்பஜன் சிங்கை காப்பியடித்து அரையும் குறையுமாக பங்காரா நடனம் ஆடினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments