இரவு நேரத்தில் அரசுப் பேருந்தை வழிமறித்து நின்ற காட்டு யானைகள்

0 121

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே இரவு நேரத்தில் அரசுப் பேருந்தை காட்டு யானைகள் வழிமறித்து நின்றதால், பயணிகள் அச்சமடைந்தனர்.

கெத்தை வனப்பகுதியில் கடந்த சில வாரங்களாக மழை பெய்ததால், சாலையோரங்களில் அதிகளவில் புல் வளர்ந்து காணப்படுகிறது. இதை உண்பதற்காக யானைகள் வருவதால், வாகனங்களை பாதுகாப்பாக இயக்குமாறு வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், நேற்றிரவு மஞ்சூரில் இருந்து கோவைக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தை, 5 காட்டு யானைகள் வழி மறித்து நின்றன. யானைகள் அங்கிருந்து நகராமல் இருந்ததால், ஓட்டுநர் பேருந்தை பின்னோக்கி இயக்கினார். அப்போது, யானைகளும் பேருந்தை நோக்கியே சில அடி தூரம் துரத்தி வந்தன.

பின்னர் யானைகள் அங்கிருந்து கலைந்து, காட்டுப்பகுதிக்குள் சென்றதால் பயணிகள் நிம்மதி அடைந்தனர். இதனால் சுமார் 20 நிமிடத்திற்குப் பிறகு அரசுப் பேருந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments