போட்ஸ்வானாவில் தந்தங்களுக்காக 87 யானைகள் சுட்டுக் கொல்லப்பட்டன

0 678

ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் ஒரே வாரத்தில் 90 யானைகள் கொல்லப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் யானைத் தந்தங்களுக்கு கடும் கிராக்கி இருப்பதால் அதற்கான வேட்டையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் ஆப்பிரிக்காவில் உயிரியல் ஆய்வாளரான மைக் சேஸ் என்பவர் ட்ரோன் கேமராக்கள் மூலம் ஆய்வு நடத்திய போது, போட்ஸ்வானா நாட்டின் வனப்பகுதியின் பல்வேறு இடங்களில் யானைகள் கொல்லப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த யானைகள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டு பின்னர் தந்தம் அறுத்து எடுக்கப்பட்டது தெரியவந்தது. அதன்படி 87 யானைகளும், 3 காண்டாமிருங்களும் கொல்லப்பட்டு கிடந்தன. இந்தச் சம்பவம் உயிரியல் ஆர்வலர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments