சூரத் அருகே பிளாஸ்டிக் கழிவு வைக்கப்பட்டிருந்த கிடங்கில் தீவிபத்து

0 126

குஜராத் மாநிலம் சூரத் அருகே பிளாஸ்டிக் கழிவுகள் வைக்கப்பட்டிருந்த கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டது. சூரத் நகர் அருகே ஹசிரா பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் கழிவு கிடங்கு ஒன்று செயல்பட்டு வருகிறது. பழைய பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு வந்து, மறுசுழற்சி முறையில் புதிய பொருட்களை தயாரிக்கும் பணி நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இன்று மதிய நேரத்தில் பிளாஸ்டிக் கழிவு கிடங்கில் தீப்பற்றியுள்ளது. தீ மளமளவென பரவி, அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்புத்துறையினர், சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments