புகழ் பெற்ற அமெரிக்கத் திரைக்கதை எழுத்தாளர் நீல் சைமன் மறைவு

0 300

புலிட்சர் பரிசு பெற்ற புகழ்பெற்ற நாடக ஆசிரியரும் திரைக்கதை எழுத்தாளருமான நீல் சைமன் தனது 91ஆவது வயதில் காலமானார்.

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த நீல் சைமன் "The Odd Couple," "Barefoot in the Park," "The Sunshine Boys" and "Brighton Beach Memoirs" ஆகிய நகைச்சுவைத் திரைப்படங்களுக்குத் திரைக்கதை எழுதியதன் மூலம் புகழ்பெற்றவர். 1991ஆம் ஆண்டு இவரின் Lost in Yonkers என்கிற திரைப்படத்துக்கு Tony விருதும் புலிட்சர் பரிசும் ஒருசேரக் கிடைத்தன. முதுமையாலும் உடல்நலக் குறைவாலும் நியூயார்க் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டிருந்த அவர் நேற்றுத் தனது 91வயதில் காலமானார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments