அமெரிக்காவின் பொருளாதார தடைகளுக்கு எதிராக ஈரான் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை

0 619

அமெரிக்காவின் பொருளாதார தடைகளுக்கு எதிராக, ஈரான் அரசு தொடர்ந்த வழக்கு, சர்வதேச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த அமெரிக்கா, ஈரானுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்து வருகிறது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால், பொருளாதார வளர்ச்சியில் தேக்கம் ஏற்படும் என கூறிய ஈரான் அரசு, சர்வதேச நீதிமன்றத்தில், கடந்த ஜூலை மாத இறுதியில் அமெரிக்காவின் பொருளாதார தடைகளை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தது.

தங்களது பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நோக்குடன் அமெரிக்கா நடந்து கொள்வதாகவும், எனவே பொருளாதார தடைகளை நீக்குவதுடன், அமெரிக்கா உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் ஈரான் அரசு தனது மனுவில் கோரியுள்ளது. இந்த வழக்கு சர்வதேச நீதிமன்றத்தில், இந்திய நேரப்படி காலை 11.30 மணியளவில் விசாரணைக்கு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments