வீடியோகேம் போட்டி நிகழ்ச்சியில் சரமாரி துப்பாக்கிச் சூடு

0 407

அமெரிக்காவில் வீடியோகேம் போட்டி நிகழ்ச்சியில் இளைஞர் ஒருவர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர்.

11 பேர் படுகாயம் அடைந்தனர். ஃப்ளோரிடா மாநிலம் ஜாக்சன்வில்லி என்ற நகரில் வணிகவளாகம் ஒன்றில் நடைபெற்ற விடியோ கேம் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றிருந்தனர்.

இந்நிலையில் 24 வயது இளைஞன் ஒருவன் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் உயிரிழந்தனர். 11 பேர் படுகாயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து அந்த இளைஞன் தன்னைத் தானே சுட்த் தற்கொலை செய்து கொண்டான். டேவிட் கட்ஸ் ((David Katz)) என்ற அந்த இளைஞனும் வீடியோ கேம் போட்டியில் பங்கேற்கவே வந்ததாகத் தெரிவித்துள்ள போலீசார் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments