அகாலி தள தலைவர் மஞ்ஜீத் சிங் மீது கண்மூடித் தனமாக தாக்கிய கும்பல்

0 97

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சீக்கிய வழிபாட்டுத்தலம் முன்பாக அகாலி தள தலைவர் மஞ்ஜீத் சிங்கை சிலர் கண்மூடித் தனமாக தாக்கியுள்ளனர்.

சுமார் 20 பேர் கொண்ட கும்பல் மஞ்சீத் சிங்கை கடுமையாக தாக்கி உள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக அமெரிக்க போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். இதுபோன்ற தாக்குதல்களுக்கெல்லாம் அஞ்சமாட்டோம் எனத் தெரிவித்துள்ள மஞ்ஜீத்சிங், தமது ஆதரவாளர்களை அமைதி காக்குமாறு கேட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலுக்கான காரணம் குறித்தும், யார் தாக்கினர் என்பது குறித்தும் தகவல் வெளியாகவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments