காட்டுத்தீயில் புதுமணப் பெண் புனிதா பலி - கணவரும் உடன் செல்லவிருந்த நிலையில் கடைசி நேரத்தில் தவிர்த்தார்

0 463

தேனி மாவட்டம் குரங்கணிமலையில் காட்டுத்தீயில் உயிரிழந்த புனிதாவுக்குத் திருமணமாகி ஒன்றரை மாதமே ஆகியுள்ளதும், அவர் கணவர் கடைசி நேரத்தில் மலையேற்றப் பயிற்சிக்குச் செல்லாததும் தெரியவந்துள்ளது. 

தேனி மாவட்டம் குரங்கணி மலையில் மலையேற்றப் பயிற்சி மேற்கொண்டவர்களில் 10பேர் காட்டுத்தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்தனர். இவர்களில் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூரைச் சேர்ந்த புனிதாவும் ஒருவர். புனிதாவுக்கும் திருப்பெரும்புதூர் பாலாஜிக்கும் கடந்த ஜனவரி மாதம் 28ஆம் தேதி தான் திருமணமாகியுள்ளது. சோழிங்கநல்லூரில் உள்ள பேபால் நிறுவனத்தில் புனிதா பணியாற்றி வந்துள்ளார்.

பாலாஜி திருப்பெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். புனிதா தன்னுடன் பணியாற்றும் 6பேருடன் மலையேற்றப் பயிற்சிக்குக் கணவர் பாலாஜியையும் அழைத்துச் செல்லத் திட்டமிட்டிருந்தார். கடைசி நேரத்தில் பணியின் காரணமாக பாலாஜி மலையேற்றத்துக்குச் செல்லவில்லை. இந்நிலையில் காட்டுத்தீயில் சிக்கிப் புனிதா உயிரிழந்தது பாலாஜிக்குத் தெரியவந்தது. இதையடுத்துப் புனிதாவின் உடலைப் பெறுவதற்காகப் பாலாஜி தேனிக்கு விரைந்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments