திருமணமான 100வது நாளை கொண்டாட சென்று குரங்கணி காட்டுத்தீயில் உயிரிழந்த புதுமணத் தம்பதி

0 1756

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் தீயில் சிக்கி உயிரிழந்த ஈரோட்டை சேர்ந்த விவேக், திவ்யா ஆகியோர் திருமணமாகி மூன்றரை மாதங்களே ஆன புதுமணத் தம்பதி என தெரியவந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடியைச் சேர்ந்த விவேக், பெங்களூரில் உள்ள ஹெ.சி.எல். நிறுவனத்தில் மென்பொறியியல் வல்லுநராக பணிபுரிந்துள்ளார். பணி நிமித்தமாக துபாயில் உள்ள கிளைக்கு அனுப்பப்பட்ட இவர் கடந்த நவம்பர் 24ஆம் தேதி திவ்யாவை திருமணம் செய்துள்ளார். அதன்பிறகு வேலை காரணமாக துபாய்க்கு புறப்பட்டுச் சென்ற விவேக், அங்கிருந்து எடுத்த புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவிட்டு, தனது மனைவியை பிரிந்து இருப்பதையும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், திருமணமான 100வது நாளை கொண்டாடுவதற்காக கடந்த மார்ச் ஒன்றாம் தேதி துபாயில் இருந்து மீண்டும் ஈரோடு வந்துள்ளார் விவேக்.

கடந்த 9ஆம் தேதி ஈரோட்டில் இருந்து  டிரக்கிங் புறப்பட்ட புதுமணத் தம்பதிகளான விவேக்கும், திவ்யாயும், அதை மற்றவர்களுக்கு தெரிவிக்கும் வகையில், தாங்கள் எடுத்த புகைப்படங்களை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். பின்னர், வழிகாட்டிகளின் உதவியுடன் சென்றபோதுதான், வனப்பகுதியில் ஏற்பட்ட தீயால் புதுமண தம்பதிகள் விவேக், திவ்யா உயிரிழந்துள்ளனர். திருமணம் முடிந்து மூன்றரை மாதங்களே ஆன நிலையில் இருவரும் உயிரிழந்தது அவர்களது குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இருவரின் எதிர்பாராத மரணம், கவுந்தம்பாடி பகுதி பொதுமக்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments