குரங்கணி மலைப் பகுதியில் தீயில் சிக்கி உயிரிழந்த 10 பேரும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள்

0 329

தேனி மாவட்டம் குரங்கணி மலைப் பகுதியில் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்த 10 பேரும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் என்பது தெரியவந்துள்ளது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகவத் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த அகிலா காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தார். தன் பெற்றோருக்கு ஒரே பெண்ணான அகிலா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் உள்ள டாடா கன்சல்டன்ஸி சர்வீசில் பணிக்குச் சேர்ந்தார். அகிலாவின் தந்தை கிருஷ்ணமூர்த்தி DRDO வில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த சுபா என்பவரும் காட்டுத் தீக்கு உயிரை பறிகொடுத்துள்ளார். இவரது தந்தை செல்வராஜ் திட்டக்குடியில் பர்னிச்சர் கடை வைத்துள்ளார். தனது பெற்றோருக்கு கடைசிமகளான சுபாவுக்கு ஒரு அண்ணன் மற்றும் ஒரு சகோதரி உள்ளனர். சோழிங்கநல்லூரில் விடுதியில் தங்கியிருந்து சுபா ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவந்தார்.

ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடி மகாத்மாபுரத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவரின் மகனான விவேக் துபாயில் பணியாற்றி வந்தார். இவர் தனது மனைவி திவ்யா மற்றும் நண்பரும் இதே பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மகனுமான தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோரும் சென்னையில் உள்ள டிரக்கிங் நிறுவனம் மூலம் குரங்கணி மலைப் பகுதிக்குச் சென்ற நிலையில் காட்டுத் தீயில் சிக்கி மூவரும் உயிரிழந்தனர்.

கோவை மாவட்டம் கிணத்துக் கடவைச் சேர்ந்த தாமோதரன் என்பவரின் மகனான விபின் என்பவரும் உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம் புதுவிளாங்குடி ராமமூர்த்தி நகரைச் சேர்ந்த திருஞானசம்பந்தம் என்பவரின் மகளான ஹேமலதா என்பவரும் உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி அவென்யூவைச் சேர்ந்த பாலாஜி என்பவரின் மனைவியான புனிதா என்பவரும் உயிரிழந்தார்.

உயிரிழந்த அருண்பிரபாகரன் என்பவர் சென்னை மதுரவாயலைச் சேர்ந்தவர்.

படுகாயங்களுடன் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேளச்சேரியை சேர்ந்த உஷாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments