டிரக்கிங் அனுப்பிவைத்த வெளிநாட்டுக்காரர் பீட்டர் அலுவலகத்தை பூட்டிவிட்டு, தலைமறைவு

0 532

தேனி குரங்கணி மலைப்பகுதியில் தீயின்போது, 9 பேர் உயிரிழந்ததை அடுத்து, அவர்களை டிரக்கிங் அனுப்பிவைத்த வெளிநாட்டு நபரான , சென்னையில் உள்ள அலுவலகத்தை மூடிவிட்டு தலைமறைவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தேனி மாவட்டம் குரங்கணி அருகே கொழுக்குமலையில் ஏற்பட்ட தீயின்போது, டிரக்கிங் சென்ற 9 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களை சென்னை பாலவாக்கத்தில் வசிக்கும் பீட்டர் என்ற வெளிநாட்டு நபர்தான், டிரக்கிங் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. சென்னை டிரக்கிங் கிளப் என்ற பெயரில், மலையேற்றப் பயிற்சி அளித்து வரும் பீட்டர், கடந்த சில நாட்களுக்கு முன்பு மென்பொருள் நிறுவன ஊழியர்கள் 27 பேரை, கொழுக்குமலைப் பகுதிக்கு டிரக்கிங் அனுப்பியுள்ளார்.

அவர் அனுப்பி வைத்த தனியார் நிறுவன ஊழியர்கள், காட்டுத்தீயில் சிக்கிக் கொண்டதாக நேற்று இரவு செய்தி வெளியானவுடன், இரவோடு இரவாக அலுவலகத்தை பூட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.

வெளிநாட்டு நபரான பீட்டர், 27 பேரை டிரக்கிங் அனுப்பிய தகவலை அறிந்த நீலாங்கரை போலீசார், அவரது அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சென்னை டிரக்கிங் கிளப் உரிமையாளரான பீட்டரையும் தேடி வருவதாக கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments