சென்னை அடையாற்றில் குதித்த இளைஞரின் உடல் மீட்பு

0 4354

நேற்று முன் தினம் நள்ளிரவு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சென்னை அடையாற்றில் குதித்த இளைஞரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். நேற்று முன்தினம் இரவு இவர் அடையாறு திரு.வி.க. பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்தபோது, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் போதையில் இருந்ததாகவும், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராதாகிருஷ்ணன், ஒரு கட்டத்தில் அடையாற்றில் குதித்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அதன்பிறகு அவர் கரை சேராததால், ராதாகிருஷ்ணனை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இரவு பகலாக தேடும் பணி நடைபெற்ற நிலையில் ராதாகிருஷ்ணனின் உடலை தீயணைப்புத்துறையினர் மீட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments