BIG STORIES
பொள்ளாச்சி பாய்ஸ் 9 பேருக்கும் ஆயுள் சிறை ஆப்பு அவைத்த “ஐ போன்”..! “ஒருத்தன் லேப்டாப்பில் வச்சிருந்தான்”
May 14, 2025 02:08 AM
502
பொள்ளாச்சி பாய்ஸ் 9 பேருக்கும் ஆயுள் சிறை ஆப்பு அவைத்த “ஐ போன்”..! “ஒருத்தன் லேப்டாப்பில் வச்சிருந்தான்”
பொள்ளாச்சியில் 8 பெண்களை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளி ஒருவனின் ஐபோன் மற்றும் லேப்டாப்பில் இருந்து கைப்பற்றப்பட்ட வீடியோக்கள் முக்கிய ஆதாரமானதாக தகவல் வெளியாகி உள்ளது.
அண்ணா விட்டுறங்க.. உங்கள நம்பித்தானே வந்தேன்... என்று பதைபதைக்கும் பெண் குரலுடன் வெளியான வீடியோ தான் பொள்ளாச்சி சம்பவத்தின் கொடுமையை உலகிற்கு உணர்த்தியது..! இந்த வழக்கு கடந்து வந்த பாதையை விரிவாகப் பார்க்கலாம்...
2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ந்தேதி பெண் ஒருவரை காரில் கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ் ஆகியோரை பெண்ணின் சகோதரர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அடித்து உதைத்த வீடியோ காட்சிகள் வெளியானது. பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் இந்த சம்பவத்தை அடிதடி வழக்காக பதிவு செய்ய முயற்சி நடந்தது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் தரப்பில், தனக்கு நேர்ந்த கொடுமையை புகாராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தெரிவித்ததால் இந்த பாலியல் கொடுமை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. பொள்ளாச்சி டவுன் போலீசார் இந்த வழக்கு தொடர்பாக திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளிகளை தப்ப வைக்க முயற்சி நடப்பதாக அப்போது எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டியதால் வழக்கு விசாரணை மார்ச் 13 ந்தேதி சிபிஐக்கு மாற்றப்பட்டது.
கைதான திருநாவுக்கரசுவின் ஐபோனில் இருந்து கைப்பற்றப்பட்ட வீடியோக்களின் அடிப்படையில் 8 பெண்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு முறையான கவுன்சிலிங் வழங்கி நடந்தவை குறித்து விரிவான விசாரணை நடத்தி அவர்களிடம் புகார்களை பெற்று தனித்தனியாக 8 வழக்குகள் பதியப்பட்டன. அதில் கிடைத்த ஆதாரங்களில் அடிப்படையில் ஹரனிமஸ் பால், பைக் பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகிய 4 பேர் 2021 ஆம் ஆண்டு சிபிஐயால் கூடுதலாக கைது செய்யப்பட்டனர்.
மேற்கண்ட 8 வழக்குகளும் கோவை மகளிர் நீதி மன்றத்தில் ஒரே வழக்காக நடத்தப்பட்டு வந்தது. இந்த வழக்கில் கைதான திருநாவுக்கரசுவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஐ போனில் இருந்தும், சபரிராஜனின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப்பில் இருந்தும் நூற்றுக்கணக்கான ஆபாச வீடியோக்கள் கைப்பற்றப்பட்டன. நீக்கப்பட்ட வீடியோக்கள் பல ரெக்கவரி சாப்ட்வேர் பயன்படுத்தி மீட்டு வழக்கில் ஆதாரமாக சேர்க்கப்பட்டது. 48 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். பிறழ் சாட்சியே இல்லாத இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் வழக்கில் தொடர்புடைய 9 பேரையும் குற்றவாளிகள் என்று அறிவித்த நீதிபதி நந்தினி தேவி, 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்புக்கூறினார்.
8 வழக்குகளில் 4 வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், சபரிராஜனுக்கு 4 ஆயுள் தண்டனைகளும் , 5 வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் திருநாவுக்கரசுவுக்கு 5 ஆயுள் தண்டனைகளும், 3 வழக்கில் சதீஷுக்கு 3 ஆயுள் தண்டனைகளும், 2 வழக்கில் வசந்தகுமாருக்கு 2 ஆயுள் தண்டனைகளும் வழங்கப்பட்டது. 5 வழக்கில் மணிவண்ணனுக்கு 5 ஆயுள் தண்டனைகளும், 3 வழக்கில் ஹரனிமஸ் பாலுக்கு 3 ஆயுள் தண்டனைகளும், ஒரு பெண்ணின் வழக்கில் குற்றம் நிரூபணமானதால் பைக் பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகிய 3 பேருக்கும் தலா ஒரு ஆயுள் தண்டனையும் வழங்கி உத்தரவிடப்பட்டது.
கடந்த 6 ஆண்டுகளாக தொடர்ந்து சிறையில் இருந்து வருவதை கருத்தில் கொண்டு குற்றவாளிகளுக்கு மொத்தமாக 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 85 லட்சம் ரூபாயை நிவாரணமாக வழங்கவும் உத்தரவிடப்பட்டதாக சிபிஐ வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 9 பேரின் குடும்பத்தினர் நீதி மன்றத்திற்கு வந்திருந்தாலும், மீடியாக்கள் தங்களை படம் பிடித்துவிடுவார்களே என அஞ்சி தள்ளியே நின்றனர். தீர்ப்புக்கு பின்னர் குற்றவாளிகள் 9 பேரும் சேலம் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தப்பு செய்ததோடு, அதனை வீயோவாகவும் பதிவு செய்து வைத்திருந்ததால் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி இல்லாமலேயே, வீடியோ ஆதரங்களின் அடிப்படையில் இந்த 9 அயோக்கியர்களுக்கும் அதிகபட்ச தண்டனை கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu