RECENT NEWS

வெள்ளியங்கிரி மலை ஏறிய 45 வயது பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

வெள்ளியங்கிரி மலை ஏறிய 45 வயது பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

Mar 09, 2026

வெள்ளியங்கிரி மலை ஏறிய 45 வயது பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

வெள்ளியங்கிரி மலை ஏறிய 45 வயது பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

Mar 09, 2026

BIG STORIES

ட்விஸ்ட் கொடுத்த இஸ்லாமிய நாடுகள்.. பாகிஸ்தானின் பாச்சா பலிக்காமல் போன தருணம்

May 12, 2025 07:21 AM

11534

ட்விஸ்ட் கொடுத்த இஸ்லாமிய நாடுகள்.. பாகிஸ்தானின் பாச்சா பலிக்காமல் போன தருணம்

ட்விஸ்ட் கொடுத்த இஸ்லாமிய நாடுகள்.. பாகிஸ்தானின் பாச்சா பலிக்காமல் போன தருணம்

இந்தியாவுடனான மோதலில் உலகில் உள்ள இஸ்லாமிய நாடுகள் தங்களுக்கு ஆதரவளிக்கும் என்ற பாகிஸ்தானின் நப்பாசையில் பலத்த அடி விழுந்துள்ளது. மாறாக பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளன.

கடந்த மாதம் 22ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் துணை அமைப்பான தி ரெஸிடென்ட்ஸ் ஃப்ரெண்ட் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலுக்கு இந்தியா ஆயத்தமானது. அதற்கு முன்னோட்டமாக நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை நடத்திப் பார்க்கப்பட்டது.

ஆனால் அதற்கு முன்பாகவே யாரும் எதிர்பாராத வகையில் பாகிஸ்தானுக்கு உள்ளேயும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் பயங்கரவாதிகளின் பயிற்சிக் கூடங்களை குண்டு வீசித் தகர்த்தது இந்தியா.

இதில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், பதிலுக்கு பாகிஸ்தான் அறிவிக்கப்படாத போரை இந்தியா மீது நிகழ்த்தியது. அதன் வெளிப்பாடாகவே பாகிஸ்தான் தொடர்ந்து ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில் தீவிரவாதிகளின் மீதான இந்தியாவின் தாக்குதலை இஸ்லாமிய எதிர்ப்பு நிலைப்பாடாக மாற்ற பாகிஸ்தான் முயற்சித்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்காக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பைச் சேர்ந்த பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளுடன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் அதற்கு பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இது இஸ்லாமிய நாடுகள் தங்கள் பின்னால் அணிவகுத்து நிற்கும் என்ற பாகிஸ்தானின் எண்ணத்தில் பேரிடியாக அமைந்தது.

அதே நேரத்தில் பஹல்காம் தாக்குதலின் போது பிரதமர் மோடி சவுதியில் சுற்றுப்பயணத்தில் இருந்ததும், தனது பயணத்தை அவர் பாதியிலேயே முடித்துக் கொண்டு திரும்பியதால் சவுதி அரேபியாவும், அதற்கு அடுத்தபடியாக மலேசியாவும் உடனடியாகவும், பாகிஸ்தானுக்கு எதிராகவும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தன.

மேலும் இந்தியா, பாகிஸ்தான் இடையே தாக்குதல் நடந்து கொண்டிருந்த போது, ஆப்கானிஸ்தானில் இந்தியா தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் கூறியது. ஆனால் அதற்கு நேர்மாறாக தங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தவே இல்லை என ஆப்கானிஸ்தான் கூறியது பெரும் ட்விஸ்ட் ஆக மாறியது.

பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் இந்தியாவுடன் நல்ல நட்பில் இருந்து வருவதால் பஹல்காம் விவகாரத்தில் பாகிஸ்தானின் பாச்சா பலிக்காமல் போனது. இது ராஜதந்திர ரீதியில் இந்தியாவுக்கு ப்ளஸ் ஆகவும், தீவிரவாதிகளுக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தானுக்கு மைனஸ் ஆகவும் மாறிப்போனது.

சிறு சிறு சச்சரவுகள் இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற வார்த்தைக்கு இந்தியாவில் காணப்படும் இந்து முஸ்லீம் ஒற்றுமையே இந்த வெற்றிக்குக் காரணம் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

திருப்பி அடித்த திரிஷா..பார்த்திபன் கனவில் கல்..பிளாஸ்ட்.. பிளாஸ்ட்.. பிளாஸ்ட்..குந்தவைக்கு கோவம் வந்திருச்சு.
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies