RECENT NEWS

விஜய் Work From Home-லிருந்து Work From Field-க்கு வந்திருப்பது மகிழ்ச்சி - தமிழிசை

விஜய் Work From Home-லிருந்து Work From Field-க்கு வந்திருப்பது மகிழ்ச்சி - தமிழிசை

Apr 27, 2025

விஜய் Work From Home-லிருந்து Work From Field-க்கு வந்திருப்பது மகிழ்ச்சி - தமிழிசை

விஜய் Work From Home-லிருந்து Work From Field-க்கு வந்திருப்பது மகிழ்ச்சி - தமிழிசை

Apr 27, 2025

BIG STORIES

பீரோ விழுந்து இறந்துவிட்டதாக நாடகம்...காதலன் புகாரால் அம்பலமான உண்மை...3 வருட காதல்... கொலையில் முடிந்த கொடூரம்....

Apr 02, 2025 04:43 PM

349

பீரோ விழுந்து இறந்துவிட்டதாக நாடகம்...காதலன் புகாரால் அம்பலமான உண்மை...3 வருட காதல்... கொலையில் முடிந்த கொடூரம்....

காதலன் புகாரால் அம்பலமான உண்மை...3 வருட காதல்... கொலையில் முடிந்த கொடூரம்....

திருப்பூரில் வேறு சாதி இளைஞரை காதலித்த தங்கையை கொலை செய்து விட்டு, பீரோ விழுந்து உயிரிழந்ததாக நாடகமாடிய சகோதரரை கைது செய்த போலீசார் , புதைக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிணகூறாய்வு செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பருவாய் கிராமத்தை சேர்ந்தவர்கள் தண்டபாணி தங்கமணி தம்பதி. கூலி வேலை செய்து வந்த இவர்களுக்கு, 25 வயதில் சரவணன் என்ற மகனும், 22 வயதில் வித்யா என்ற மகளும் இருந்துள்ளனர். எலக்ட்ரீசியனான சரவணன் ஊரில் கிடைக்கும் வேலைகளுக்கு சென்று வந்திருக்கிறார். வித்யா கோவை அரசு கல்லூரியில் எம்ஏ தமிழ் இலக்கியம் இரண்டாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார்.

சம்பவத்தன்று ஞாயிற்று கிழமை என்பதால் தண்டபாணியும் தங்கமணியும் கோவிலுக்கு சென்றுவிட்டனர். வீட்டில் சரவணனும் வித்யாவும் மட்டுமே இருந்துள்ளனர். சாமி கும்பிட்டு விட்டு மதியம் வீடு திரும்பிய தண்டபாணியும் தங்கமணியும், வித்யா ரத்தவெள்ளத்தில் பேச்சு மூச்சின்றி கிடப்பதை கண்டு அதிர்ந்து போயிருக்கிறார்கள்.

பீரோ வித்யா மீது விழுந்துவிட்டதாக சரவணன் பெற்றோரிடம் கூறியிருக்கிறார். உடனே 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மருத்துவ பணியாளர்கள் வித்யாவை பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டது உறுதியாகியிருக்கிறது. அதோடு காவல்நிலையத்துக்கு தகவல் அளிக்க கூறியிருக்கிறார்கள். ஆனால் வித்யாவின் குடும்பத்தினரோ போலீஸ் ஸ்டேஷனுக்கு இன்ஃபார்ம் செய்யாமல், மூன்றே மணி நேரத்தில் அவசர அவசரமாக இறுதி சடங்கை செய்து முடித்து சடலத்தை புதைத்திருக்கிறார்கள்.

ஊரை சேர்ந்த பலருக்கும் இந்த திடீர் மரணத்தில் சந்தேகம் இருந்தாலும், யாரும் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த சூழலில் தான் காமநாயக்கன்பாளையம் காவல்நிலையத்தில் வித்யாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஒரு புகார் வந்திருக்கிறது. அந்த புகாரை கொடுத்தவர் திருப்பூர் விஜயாபுரத்தை சேர்ந்த இளைஞர் வெண்மணி.

வெண்மணிக்கும் வித்யாவுக்கும் என்ன சம்மந்தம்? எதற்காக அவர் இப்படி ஒரு புகாரை கொடுத்திருக்கிறார் என்று போலீசார் விசாரித்த போது தான், அவர்களின் காதல் கதை வெளிவந்திருக்கிறது.

இளைஞர் வெண்மணி , வித்யாவின் கல்லூரி வகுப்பு தோழன். இருவரும் கோவை அரசு கல்லூரியில் யூஜி படித்து போது, காதலில் விழுந்திருக்கிறார்கள். பிஜி வந்த பிறகும் அந்த காதல் தொடர்ந்திருக்கிறது. மூன்று வருடங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில், குடும்ப சூழல் காரணமாக வெண்மணி பிஜி முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போதே படிப்பை டிஸ் கண்டினியூ செய்து விட்டு வேலைக்கு சென்றிருக்கிறார். ஆனால் காதலை விடாமல் கண்டினியூ செய்திருக்கிறார்.

சமீபத்தில் தங்கள் காதலை, திருமணமாக கன்வெர்ட் செய்ய வெண்மணியும், வித்யாவும் முடிவு செய்திருக்கிறார்கள். வெண்மணி வீட்டில் கிரீன் சிக்னல் கிடைத்துவிட்டது. ஆனால் வித்யா வீட்டில் காதல் திருமணத்துக்கு தடை போட்டுள்ளனர். காரணம் வெண்மணி வேறு சமூகத்தை சேர்ந்தவர்...

கல்லூரிக்கு படிக்க சென்ற மகள் காதல் பாடத்தை படித்து வந்திருப்பது மொத்த குடும்பத்தையும் அதிர வைத்திருக்கிறது. அதோடு வெண்மணி வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பது அவர்களை மேலும் கொதிப்படைய வைத்திருக்கிறது.

உடனே வித்யாவுக்கு சொந்த சமூகத்திலேயே மாப்பிள்ளை பார்க்க முடிவு செய்திருக்கிறார்கள். கடந்த பத்து நாட்களாக தீவிரமாக வரன் தேடியிருக்கிறார்கள். இந்த சூழலில் தான் வித்யா மர்மமான முறையில் இறந்து போயிருப்பது, காதலன் வெண்மணிக்கு சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.

வெண்மணி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் வித்யாவின் குடும்பத்தினரிடம் விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள். பீரோ விழுந்து தான் வித்யா இறந்துவிட்டதாக குடும்பமே கோரஸ்சாக ஒரே பதிலை சொல்லியிருக்கிறார்கள்.

உடனே போலீசார் வித்யாவின் சடலத்தை தோண்டி எடுத்து அங்கேயே உடற்கூராய்வு செய்திருக்கிறார்கள். அதில் தான் வித்யாவின் பின்பக்க தலையில் பலத்த காயம் இருப்பது தெரிய வந்திருக்கிறது. இரும்பு கம்பி போன்ற ஆயுதத்தால் அடித்ததால் இந்த காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவ குழு முதற்கட்ட தகவலை தெரிவிக்க, போலீசாரின் சந்தேகம் வலுவாகியிருக்கிறது.

மீண்டும் போலீசார் வித்யாவின் குடும்பத்தினரிடம் கிடுக்குப்பிடி விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள். அதில் தான் சரவணன் அனைத்து உண்மைகளையும் கக்கியிருக்கிறார்...

ஆம்... சரவணன் தான் வித்யாவை அடித்து கொன்று விட்டு பீரோ விழுந்துவிட்டதாக நாடகமாடியிருக்கிறார்.

வித்யாவின் காதலை குடும்பத்தினர் நிராகரித்ததோடு, அவரது விருப்பம் இல்லாமலேயே வரன் பார்க்க தொடங்கியிருக்கிறார்கள். இதனால் வித்யா சண்டை போட்டிருக்கிறார். கடந்த பத்து நாட்களாகவே அந்த சண்டை உக்கிரமடைந்திருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த சரவணன், சகோதரி என்றும் பாராமல் வித்யாவை கொல்ல முடிவு செய்திருக்கிறார்

சம்பவத்தன்று பெற்றோர் வீட்டில் இல்லாத நிலையில், வித்யாவோடு தகராறு செய்த சரவணன் இரும்பு கம்பியால் அவரது பின்பக்க தலையில் அடித்து கொன்று விட்டு பீரோ விழுந்து இறந்துவிட்டதாக நாடகமாடியிருக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார் ஆணவகொலை செய்த சரவணனை கைது செய்திருக்கிறார்கள். அதோடு இந்த கொலையை மறைக்க அவரது பெற்றோர் உடைந்தையாக இருந்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

ஒருவேளை அவர்களும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்தது உறுதியானால் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகின்றது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

பழைய கதைகளை சொல்லி அரசியல் செய்ய நான் வரவில்லை - த.வெ.க தலைவர் விஜய் பேச்சு

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies