முகப்பு
தமிழ்நாடு அரசின் 2025-2026ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல்
Mar 14, 2025 04:38 AM
492
தமிழ்நாடு அரசின் 2025-2026ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல்
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல்
தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்
2ஆவது பெரிய பொருளாதாரம் கொண்ட தமிழ்நாடு
இந்தியாவின் 2ஆவது பொருளாதாரம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு - நிதியமைச்சர்
பன்முக வளர்ச்சியை இலக்காக வைத்து தமிழ்நாடு வெற்றி பெற்றுள்ளது - தங்கம் தென்னரசு
"இருமொழி கொள்கையில் சமரசமில்லை; தொடரும்"
தமிழ்நாட்டில், இருமொழி கொள்கையில் எவ்வித சமரசமும் இன்றி தொடர்ந்து முன்னெடுக்கப்படும்: தங்கம் தென்னரசு
எத்தனை தடைகள் வந்தாலும், தமிழ்நாட்டை, சமநிலை தவறாது வழிநடத்துவோம்
எதிர்வரும் 25 ஆண்டுகால பாதைக்கான திட்டங்களை தீட்ட வேண்டிய நேரமிது; உடனடியாக செயல்திட்டங்கள் வகுக்கப்படும்
அடுத்த 25 ஆண்டுகளுக்கான பாதைகளை திட்டமிட வேண்டும்; நகர வளர்ச்சி முறைப்படுத்தப்பட வேண்டும்
செயற்கை நுண்ணறிவில் இளைஞர்களின் பணித்திறன் மேம்பாடு உரிய கவனம் பெற வேண்டும்
தமிழ்நாடு இருமொழிக் கொள்கையை தொடர்ந்து பின்பற்றுவதால், தமிழர்கள் உலகெங்கும் கோலோச்சுகின்றனர்
உலகில் உள்ள அனைத்து மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் என்ற பெருமையை விரைவில் திருக்குறள் பெறும்
500 தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்க்க நடவடிக்கை; இதற்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு
ஓலைச்சுவடி, கையெழுத்து பிரதிகளை மின்பதிப்பாக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு
சிங்கப்பூர், துபாய், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் தமிழ் புத்தக கண்காட்சியை இந்தாண்டு முதல் நடத்த ஏற்பாடு
தமிழின் தொன்மை தொடர்ச்சியை அறிய மதுரையில் உலகத் தமிழ் கண்காட்சி மையம் அமைக்கப்படும்
உலக தமிழ் ஒலிம்பியாட் இனி ஆண்டுதோறும் நடத்தப்படும்; பரிசு தொகை ரூ.1 கோடி
டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்ளிட்ட இந்திய நகரங்களிலும் தமிழ் புத்தக கண்காட்சி நடத்தப்படும்
தமிழ்நாட்டில் பூம்புகார் முதல் நாகப்பட்டினம் வரை, ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும்
ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அகழாய்வு பணிகள் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும்
கீழடி, ஆதிச்சனூர், தெலுங்கனூர், வெள்ளலூர், மணிக்கொல்லை, கரிவலம்வந்தநல்லூர், பட்டணமருதூர், நாகப்பட்டினத்தில் தொல்லியல் அகழாய்வுகள்
நொய்யல் அருங்காட்சியகம் ரூ.22 கோடி மதிப்பீட்டிலும், நாவாய் அருங்காட்சியகம் ரூ.21 கோடியிலும் அமைக்கப்படும்
மாமல்லபுரம், திருவண்ணாமலையில் தமிழர் பண்பாட்டு அருங்காட்சியம் அமைக்கப்படும்
தமிழரின் தொன்மையை அனைவரும் அறியும் வகையில், ரூ.40 கோடியில் எழும்பூர் அருங்காட்சியகத்தில் காட்சி அரங்கம்
"இந்திய துணை கண்டத்தின் வரலாறு, தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் எழுதப்பட வேண்டும்"
2025-2026ஆம் நிதியாண்டில் 1 லட்சம் புதிய வீடுகள் ரூ.3500 கோடியில் கட்டப்படும்
ஊரக பகுதிகளில், முதற்கட்டமாக 25 ஆயிரம் புதிய வீடுகள் கட்ட ரூ.600 கோடி ஒதுக்கீடு
100 நாள் வேலை திட்டத்திற்கான நிலுவையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு
முதலமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.2,200 கோடி ஒதுக்கீடு
சென்னை வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து குருநானக் கல்லூரி சந்திப்பு வரை ரூ.310 கோடியில் மேம்பாலம் அமைக்கப்படும்
தனியார் பங்களிப்புடன் அடையாறு ஆறு சீரமைப்பு பணி ரூ.1500 கோடியில் மேற்கொள்ளப்படும்; 30 மாதங்களில் பணி முடிக்கப்படும்
திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களில் ஆறுகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்க ரூ.400 கோடி மதிப்பீட்டில் திட்டம்
சென்னையில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர் பூங்காக்கள் ரூ.88 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்
புதுக்கோட்டை, அறந்தாங்கி கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.1820 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்
சென்னையில் பெருநகரில் சீராக குடிநீர் விநியோகம் செய்ய ரூ.2423 கோடி மதிப்பீட்டில் முதன்மை சுற்றுக்குழாய் திட்டம்
நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.26,678 கோடி ஒதுக்கீடு
தென்காசியில் ரூ.864 கோடி, தூத்துக்குடியில் ரூ.370 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டங்கள்
7 மாவட்டங்களில் புதிய கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு ரூ.6668 கோடி ஒதுக்கீடு; 29.74 லட்சம் பேர் பயன்பெறுவர்
ரூ.890 கோடியில் திருப்பூர் மாவட்டத்தில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்
ஈரோட்டில் ரூ.374 கோடி; திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.150 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டங்கள்
முதற்கட்டமாக சென்னைக்கு அருகே உலக தர வசதிகளுடன் "புதிய நகரம்" 2000 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும்