தைப்பூசம் : முருகன் கோயில்களில் திரண்ட பக்தர்கள்
Feb 12, 2025
TREANDING
தொடர்ந்து 8ஆவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்
Feb 01, 2025 05:46 AM
136
தொடர்ந்து 8ஆவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்
2025 - 2026 மத்திய பட்ஜெட்
நாடாளுமன்றத்தில் 2025 - 26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
தொடர்ந்து 8ஆவது முறையாக மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்
எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே பட்ஜெட் தாக்கல்
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமைதியாக இருக்கையில் அமருமாறு சபாநாயகர் ஓம் பிர்லா அறிவுறுத்தல்
நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கவும், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது - நிர்மலா சீதாராமன்
வளர்ச்சியடைந்த தேசம் என்ற நிலையை எட்ட தொடர்ந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன - நிர்மலா சீதாராமன்
பெரிய பொருளாதார நாடுகளில் விரைவாக வளரும் நாடாக இந்தியா உள்ளது - நிர்மலா சீதாராமன்
நடுத்தர குடும்ப நலனுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது- நிர்மலா சீதாராமன்
விவசாயம், பெண்கள், இளைஞர்களின் நலனிற்கும் பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது - நிர்மலா சீதாராமன்
நாட்டின் வளர்ச்சி ஒன்றே பட்ஜெட்டின் நோக்கம் - நிர்மலா சீதாராமன்
அடுத்த 5 ஆண்டுகள் நமக்கான வாய்ப்பாக அமையும் - நிர்மலா சீதாராமன்
வேளாண் துறையில் அதிக வேலைவாய்ப்புகளை பெருக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன - நிர்மலா சீதாராமன்
குறைந்த வேளாண் உற்பத்தி கொண்ட 100 மாவட்டங்களுக்கு புதிய திட்டம் - நிர்மலா சீதாராமன்
1.7 கோடி விவசாயிகளுக்கு புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது - நிர்மலா சீதாராமன்
நாட்டின் வளர்ச்சிக்கு விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது - நிர்மலா சீதாராமன்
பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயித்து அரசு செயல்படுகிறது - நிர்மலா சீதாராமன்
பருப்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் - நிர்மலா சீதாராமன்
பருப்பு உற்பத்தியில் 6 ஆண்டுகளில் தன்னிறைவு அடைய இலக்கு - நிர்மலா சீதாராமன்
பீகாரில் தாமரை விதைக்களுக்காக புதிய வாரியம் அமைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்
மீன் உற்பத்தியை பெருக்க மீனவர்களுக்கு சிறப்பு திட்டம் அறிமுகம் - நிர்மலா சீதாராமன்
விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படும் - நிர்மலா சீதாராமன்
கிஷான் கிரடிட் கார்டுகளுக்கான வரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு - நிர்மலா சீதாராமன்