தமிழ்நாடு
ஆம்புலன்சில் இருந்த ஸ்ட்ரச்சருக்குள் சிக்கிய இளைஞரின் தலை.. மீட்ட தீயணைப்புத்துறையினர்
Jan 07, 2025 09:53 AM
20
57
ஆம்புலன்சில் இருந்த ஸ்ட்ரச்சருக்குள் சிக்கிய இளைஞரின் தலை.. மீட்ட தீயணைப்புத்துறையினர்
மயிலாடுதுறையில் சாலை விபத்தில் காயமடைந்து தனியார் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டபோது ஸ்ட்ரச்சருக்கு அடியில் தலை சிக்கிக் கொண்டு வலியால் கதறிய இளைஞர் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக தீயணைப்புத்துறையினரால் மீட்கப்பட்டார்.
குத்தாலம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்களான முகமது சாஜித், முகமது ரியாம் மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியுள்ளனர்.