தமிழ்நாடு
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு.. ஆட்சியரிடம் மனுக்கொடுத்துவிட்டு முழக்கம் எழுப்பிய கிராம மக்கள்..
Jan 06, 2025 10:45 AM
20
68
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு.. ஆட்சியரிடம் மனுக்கொடுத்துவிட்டு முழக்கம் எழுப்பிய கிராம மக்கள்..
சிவகங்கை நகராட்சியுடன் வாணியங்குடி, காஞ்சிரங்கால் கிராமங்களை இணைக்கக்கூடாது என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள், நூறு நாள் வேலை திட்டம் உள்ளிட்டவை பறிபோகும், வரிகள் உயரும் என முழக்கம் எழுப்பினர்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்த நல்லூர், நொச்சிக்குட்டை கிராம மக்கள், புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.