RECENT NEWS

ஸ்பெஷல் தரிசன டிக்கெட்டைப் போல் போலி டிக்கெட் தயாரித்து மோசடி... ஸ்கேன் செய்தபோது போலி டிக்கெட் என்பது அம்பலம்

ஸ்பெஷல் தரிசன டிக்கெட்டைப் போல் போலி டிக்கெட் தயாரித்து மோசடி... ஸ்கேன் செய்தபோது போலி டிக்கெட் என்பது அம்பலம்

Jan 17, 2025

ஸ்பெஷல் தரிசன டிக்கெட்டைப் போல் போலி டிக்கெட் தயாரித்து மோசடி... ஸ்கேன் செய்தபோது போலி டிக்கெட் என்பது அம்பலம்

ஸ்பெஷல் தரிசன டிக்கெட்டைப் போல் போலி டிக்கெட் தயாரித்து மோசடி... ஸ்கேன் செய்தபோது போலி டிக்கெட் என்பது அம்பலம்

Jan 17, 2025

இந்தியா

மரம் அறுக்கும் எந்திரத்தால் வீடு புகுந்து கழுத்தை அறுத்த “டெலிவரி டேஞ்சர் பாய்”..! தனியாக இருக்கும் பெண்களே உஷார்

Dec 24, 2024 01:54 AM

20

55

மரம் அறுக்கும் எந்திரத்தால் வீடு புகுந்து கழுத்தை அறுத்த “டெலிவரி டேஞ்சர் பாய்”..! தனியாக இருக்கும் பெண்களே உஷார்

மரம் அறுக்கும் எந்திரத்தால் வீடு புகுந்து கழுத்தை அறுத்த “டெலிவரி டேஞ்சர் பாய்”..! தனியாக இருக்கும் பெண்களே உஷார்

ஆன்லைன் டெலிவரி பாய் போல வீட்டின் கதவை தட்டி உள்ளே புகுந்த இளைஞர், மரம் அறுக்கும் எந்திரத்தால் விவசாயியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கணவனை கொன்றவனை கதவை பூட்டி போலீசில் சிக்க வைத்த சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

கர்நாடக மாநிலம்.. பெங்களூரு - மைசூரு தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள பாண்டவபுரா கிராமத்தில் ஒரு பெரிய வீட்டிற்கு கையில் பையுடன் சென்று வீட்டின் கதவை தட்டினார்... இளைஞர் ஒருவர்..

வீட்டில் இருந்து வெளியே வந்த யசோதம்மாவிடம், தன்னை டெலிவரி பாய் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு,நீங்கள் ஆர்டர் செய்த மரம் அறுக்கும் எந்திரத்தை டெலிவரி செய்ய வந்திருப்பதாக கூற, அவரோ தாங்கள் அப்படி ஏதும் ஆர்டர் செய்யவில்லையே என்று மறுத்தார்

அப்படியென்றால் ஆர்டர் செய்தது யார்? என்று கூறியபடியே வீட்டில் பொறுத்தி இருக்கும் சிசிடிவி காமிராவை பார்த்து விட்ட இளைஞர் அங்கிருந்து விலகி செல்கிறார்

யசோதம்மாவும் , அவரை பின் தொடர்ந்து சென்ற நிலையில் சற்றும் எதிர்பாராத நேரத்தில் அந்த பெண்ணின் கழுத்தை மரம் அறுக்கும் எந்திரத்தால் அந்த இளைஞர் அறுக்க முயன்றார், அவர் விலகிக்கொண்டதால் முகத்தில் வெட்டு விழுந்தது, ரத்தத்தை கண்டதும் யசோதம்மா மயங்கிச்சரிந்தார்

அடுத்த நொடியே வேகமாக வீட்டிற்குள் புகுந்த அந்த ஆசாமி வீட்டிற்குள் பக்கவாதத்தால் படுத்திருந்த 60 வயதான ரமேஷ்ஷின் கழுத்தை அறுத்து கொன்று வீட்டையே ரத்தசகதியாக மாற்றிவிட்டு கொள்ளை முயற்சியில் இறங்கியதாக கூறப்படுகின்றது. அதற்குள்ளாக சுய நினைவு திரும்பிய யசோதம்மா ஓடிச்சென்று கொடூரனை வீட்டுக்குள் வைத்து கதவைப்பூட்டி கத்திக் கூச்சலிட்டார்.

யசோதம்மாவின் அபயக்குரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். அதற்குள்ளாக உஷாரான கொள்ளையன் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு வெளியே தப்ப முயன்றான். ஒன்று கூடிய மக்கள் அவனை மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்

விசாரணையில் மரம் அறுக்கும் எந்திரத்துடன் வீட்டுக்குள் நுழைந்த கொடூர கொலையாளி ஸ்ரீரங்கபட்டணாவை சேர்ந்த 37 வயதான முகமது இப்ராகிம் என்பது தெரியவந்தது. மரம் அறுக்கும் ஆலையில் வேலைபார்த்து வந்த இப்ராகிம், ஆன் லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் கடனாளியானதாக கூறப்படுகின்றது. கடனை திருப்பி அடைக்க கொள்ளையடிக்க முடிவு செய்ததாகவும், ஆன் லைன் டெலிவரி பாய் போல வேடமிட்டு பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கைவரிசை காட்டியதை போலீசார் கண்டுபிடித்தனர்.

கொல்லப்பட்ட விவசாயி ரமேஷ் படுத்த படுகையாக இருந்ததால் வீட்டில் யசோதம்மா மட்டும் தனியாக இருப்பதாக நினைத்து இப்ராஹிம் , அந்த வீட்டிற்கு கொள்ளையடிக்க சென்றதாகவும், அவர் நோயாளி என்பதே தெரியாமல் அவரை கொடூரமாக கொன்றதாகவும் போலீசார் தெரிவித்தனர். கொள்ளையனின் தாக்குதலில் பலத்த காயமடைந்த யசோதம்மாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள், டெலிவரிபாயாக இருந்தாலும் கதவை திறப்பதை தவிர்த்து கதவிடுக்கு சங்கிலியை பயன் படுத்துமாறு போலீசார் அறிவுறுத்து கின்றனர்

SHARE

shareshareshareshare

RELATED POSTS

BIG STORIES

போலீசுக்கு பயந்து வீட்டுக்குள் பதுங்கி பூட்டிக் கொண்ட விசிக Ex மாவட்ட செயலாளர்..! மனைவியின் கோஷம் தான் ஹைலைட்..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News