தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர் 55 பேர் தயார் நிலை - அமைச்சர் தா.மோ.அன்பரசன்..
செங்கல்பட்டு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக 390 இடங்கள் கண்டறியப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரத்தில் சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்தார்.
தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர் 55 பேர் தயார் நிலையில் இருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
Comments