ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன் வெட்டிக் கொலை..

0 1091

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே சேமலைகவுண்டம்பாளையம் பகுதியில் தெய்வசிகாமணி, அவரது மனைவி அலமேலு, மகன் செந்தில்குமார் மூவரும் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, வீட்டின் பின்பக்கம் சத்தம் கேட்டு எழுந்து வெளியே வந்த தெய்வசிகாமணியை, அங்கு மறைந்திருந்த நபர்கள் வெட்டிக் கொலை செய்துவிட்டு, வீட்டுக்குள் சென்று அலமேலுவையும் செந்தில்குமாரையும் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

தகவல் அறிந்து வந்த போலீசார், பீரோ உடைக்கப்பட்டிருப்பதால் பணம், நகைக்காக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரித்து வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில் 8 சவரன் நகை கொள்ளை போனது தெரியவந்துள்ள நிலையில், கைரேகை மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் லட்சுமி தெரிவித்தார்.

கோவையில் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த செந்தில்குமார் பல்லடத்தில் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து குழந்தையுடன் வந்த மனைவி, கதறி அழுதார். உறவினர்கள் ஆறுதல் கூறி சமாதானம் செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments