பா.ஜ.க மாவட்ட பொருளாளர் முருகானந்தம் வீட்டிலும் சகோதரர் வீடுகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு
அ.தி.மு.க ஆட்சி காலத்தில் எல்.இ.டி மின்விளக்குகள் சப்ளை செய்ததில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகாரில் புதுக்கோட்டையில் பா.ஜ.க மாவட்ட பொருளாளர் முருகானந்தம் மற்றும் அவரது சகோதரர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது.
உள்ளாட்சி, நகராட்சி அமைப்புகளில் எல்.இ.டி லைட் பொருத்துதல், கொரோனா காலத்தில் பிளீச்சிங் பவுடர் தெளிப்பு உள்ளிட்ட ஒப்பந்த பணிகளை மேற்கொள்ள முருகானந்தம் மற்றும் அ.தி.மு.க பிரமுகரான அவரது சகோதரர் பழனிவேலு ஒப்பந்தம் எடுத்ததில் முறைகேடு நடந்ததாக 2021ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இதன் அடிப்படையில் தற்போது சார்லஸ் நகரில் உள்ள முருகானந்தம் , ஆலங்குடியில் உள்ள பழனிவேல், கறம்பக்குடியில் உள்ள மற்றொரு சகோதரர் ரவிச்சந்திரன் ஆகியோர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
Comments