ரூ.1.80 கோடி மோசடி வழக்கில் வங்கி முன்னாள் அதிகாரி கைது
ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் கடன் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக பேங்க் ஆப் பரோடா வங்கி முன்னாள் உதவி பொதுமேலாளர் கைது செய்யப்பட்டார்.
கடன் மோசடி வழக்கில் சென்னை புழுதிவாக்கத்தில் செயல்பட்டு வந்த லெமூரியா பூட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி, சதீஷ் பாபு, ராஜா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், இயந்திரங்கள் வாங்காமலேயே வாங்கியது போல கணக்கு காட்டுவதற்காக வங்கி அதிகாரியாக இருந்த ராதாகிருஷ்ணன் போலி ஆவணங்கள் கொடுத்தது தெரியவந்ததால் ஹைதராபாத்தில் பதுங்கியிருந்தவரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
Comments