கடலில் வீசி வரும் பலத்த சூறைக்காற்று டிச.2 ஆம் தேதி வரையில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தை ஒட்டிய கடல் பரப்பில் சூறைக்காற்று வீசி வருவதால் வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி வரையில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தென், வடதமிழக கடல் பரப்பு, ஆந்திர கடல்பரப்புகளில் இந்த சூறைக்காற்றும் வீசும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென வானிலை மையம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.
Comments